Tamilnadu fishermen court custody order

நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 5 ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்குச்சென்றுள்ளனர். அதன்படி மீனவர்கள் பருத்தித்துறை அருகே நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 25 பேரை கைது செய்துள்ளனர். மேலும் மீன் பிடிக்க பயன்படுத்தப்பட்ட இரு படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து மீனவர்களை பருத்தித்துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட 25 மீனவர்கள் மீது சட்டவிரோதமாக மீன் பிடித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு டிசம்பர் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் 25 பேரும் இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment