ADVERTISEMENT

'அந்தி வந்தால் நிலவு வரும்;இந்தி வந்தால் பிளவு வரும்'-புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக சீமான் ஆர்ப்பாட்டம்

11:55 AM Aug 16, 2020 | kalaimohan

ADVERTISEMENT

வளசரவாக்கத்தில் உள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் முன்பு சீமான் மற்றும் அவரது கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என அந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தனிமனித இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்தபடி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான்,

''இந்தி, இந்தியா இதை கட்டமைப்பது தான் இவர்கள் எண்ணம். அதற்கு ஏற்ப ஒரு கல்விக் கொள்கையை திணிக்க முயல்கிறார்கள். மூன்றாவது மொழியாக இந்தி படிப்பது மூலமாக தேசிய ஒருமைப்பாடு உருவாகும் என்கிறார்கள். கவிஞர் கபிலன் எழுதிய கவிதை போல 'அந்தி வந்தால் நிலவு வரும் இந்தி வந்தால் பிளவு வரும்' என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல மொழிகள் என்றால் ஒரு நாடாக இருக்கும். ஒரு மொழி என்றால் பல நாடு பிறக்கும். இதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்பு கூர்ந்து இந்த செய்தியை கேட்கிறவர்கள் கவனிக்க வேண்டும், என்னை பெற்ற தாயை மதிக்காத உறவுகளிடம் எனக்குப் பற்று வருமா? தாய்க்கும் மேலாக நேசிக்கின்ற எங்கள் தாய்மொழி மதிக்காத தேசத்தின் மீது பற்று வருமா? எல்லா தேசிய மொழிகளையும் ஒழித்துவிட்டு ஒரே மொழியை நாடு ஏற்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பேரறிஞர் அண்ணா சொல்லியது போல ஒரு மொழியால் எப்படி தேசப்பற்று வரும். இந்தியை நாடெங்கும் படிக்க வேண்டும் சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும் என சொல்கிறீர்கள் தமிழை நாடெங்கும் படிக்க வேண்டும் என சொல்வீர்களா சொல்லுங்களே பார்ப்போம். மத்திய அரசிற்கு வரலாறு என்றாலே வட இந்தியர் வரலாறுதான். வரலாறு என்றால் வல்லபாய் பட்டேல் தான் அவர்களுக்கு ஞாபகம் வரும், நமது தாத்தா வ.உ.சிதம்பரனார் ஞாபகத்திற்கு வருவாரா? வீரப்பெண்மணி என்றால் அவர்களுக்கு ஜான்சி ராணியை தான் சொல்வார்கள் நமது பாட்டி வேலுநாச்சியாரை சொல்வார்களா? இப்படி ஒரு இனத்தின் வரலாறு அழிக்கப்பட்டாலே அந்த இனம் அழிந்துவிடும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்'' என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT