நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆ.ராசா. மறைந்த திமுக தலைவர் கலைஞரின் 96-வது பிறந்தநாள் விழா சமீபத்தில் நடந்தபோது முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசும் போது, இன்றைய இளம் வாக்காளர்கள் பலர் கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கும் , சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்த நிகழ்வை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. தமிழக அரசியல் வரலாறு அவர்களுக்கு தெரியவில்லை.

kamal

Advertisment

Advertisment

தமிழகமெங்கும் பள்ளிகளைத் திறந்து, மாணவர்களுக்காக சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர். மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் மாற்றியவர் பேரறிஞர் அண்ணா. பெண்களுக்கான உரிமை வழங்கும் சட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர். எம்.ஜி.ஆர் மீது இருந்த சினிமா மோகத்தால் மட்டுமே இன்னும் மக்கள் நினைவில் இருக்கிறார். அவரது திட்டங்களால் அல்ல. இன்னும் 25 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர் மக்களிடம் இருந்து மறக்கப்படுவார். ஆனால் பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி போன்ற தலைவர்கள் செய்த வரலாற்றை இன்னும் எத்தனை தலைமுறை கடந்தாலும் அவர்கள் போற்றப்படுவார்கள். அதுவே உண்மையான சாதனை என்று ஆ.ராசா பேசினார்.