ADVERTISEMENT

ஆண்மைக்காகக் கடத்தப்படும் கடல் அட்டை, கடல் பல்லிகள்..!!!

05:18 PM Sep 13, 2018 | nagendran

ஆண்மை விருத்திக்காகவும், மருந்துக்காகவும் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த கடல்வாழ் உயிரிகளான கடல் அட்டைகளையும், கடல் பல்லிகளையும் பறிமுதல் செய்தததோடு கடத்தலில் ஈடுப்பட்டவரையும் கைது செய்துள்ளது மாவட்ட வனத்துறை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராமநாதபுரம் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள மன்னார்வளைகுடா பகுதி கடல் வாழ் உயிரினங்களின் சொர்க்கப்பூமியாகும். இங்கு தான் அரிய வகை கடல் உயிரிகளோடு கடல் அட்டை, கடல் பல்லி, கடல் குதிரை போன்ற உயிரினங்கள் ஏராளமாக வாழ்கின்றது. இதில் கடல் அட்டை ஆண்மை விருத்திக்கானது என யாரோ ஒருவர் கொளுத்திப் போட கடல் அட்டைகளை பிடித்து, கடத்தல் தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றனர் ராமநாதபுர மாவட்டத்துக்காரர்கள். பொதுவாக கடல் அட்டைக்கென தனி வலை எதுவும் கிடையாது. மீன்களோடு வலையில் சிக்கிக் கொள்ளும் இந்தக் கடல் அட்டை பிடிப்பட்டவுடேன் இறந்து விடும் தன்மைக் கொண்டது. உயிருடன் இல்லாத இந்தக் கடல் அட்டையை கடலுக்குக் கொண்டு வந்தாலே, " ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதும் வழக்கமான ஒன்று." என்பதால் எந்த மீனவர்களும் இதனைக் கொண்டு வருவதில்லை. கடத்தல் தொழிலில் ஈடுபடுவர்கள் பணத்தாசையைக் காட்டி மீனவர்களை கைக்குள் வைத்துக் கொண்டு கடல் அட்டையை கடத்துகின்றது குறிப்பிடத்தக்கது. இதற்காக ஆங்காங்கே வனத்துறையிடம் கைதாவதும் வழக்கமான ஒன்று.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக் கடற்கரைச்சாலையில் மணக்குடி விலக்கு அருகே வந்துக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை சந்தேகப்பட்டு சோதித்தனர் வனவர் சுதாகர் தலைமையிலான ஜோசப், செல்வராஜ் மற்றும் விஜயபாஸ்கர் உள்ளிட்ட வனத்துறை டீம். சோதனையில் தடைச்செய்யப்பட்ட 11 கிலோ கடல் அட்டைகளும், கடல் பல்லிகளும் இருப்பது தெரியவர வாகனத்தில் வந்த தேவிப்பட்டிணத்தைச் சேர்ந்த முகம்மதுஅலியை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

"கடல் அட்டைக்கும் ஆண்மைக்கும் அறிவியல் பூர்வமாக எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் இந்தக் கடத்தல் தொடர்கதையான ஒன்று." என்கின்றனர் வனத்துறையினர். கடத்தல்காரர்களும் அவர்களுக்கு உதவிபுரியும் மீனவர்களும் செவிமடுப்பார்களா..?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT