ADVERTISEMENT

எஸ்.வி.சேகரை கைது செய்ய வலியுறுத்தியும், பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்கை திரும்பப்பெறக் கோரியும் எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்

08:33 PM May 03, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

பெண் பத்திரிகையாளர்களை இழிவுப்படுத்திய எஸ்.வி.சேகரைக் கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் தெகலான்பாகவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் பத்திரிகையாளர்கள் தீக்கதிர் குமரேசன், பீர் முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

ADVERTISEMENT

பெண் நிருபரைக் கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்பு கேட்டார். இந்தச் சம்பவத்தை அடுத்து, நடிகர் எஸ்.வி.சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பெண் செய்தியாளர்களைப் பற்றி கேவலமான ஒரு பதிவை வெளியிட்டார். இதனிடையே தொடர்ந்து பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாக சித்தரித்து எழுதி வரும் எஸ்.வி.சேகர் மற்றும் எச். ராஜாவுக்கு எதிராகப் பத்திரிகையாளர்கள் கொந்தளித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


இந்நிலையில் இன்று(மே.03) மாலை 04 மணியளவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்து “பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த எஸ்.வி.சேகரை கைது செய்ய வலியுறுத்தியும், பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்கை திரும்பப்பெறக் கோரியும்” எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது.

இந்தக் கண்டன போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, தீக்கதிர் பத்திரிக்கை ஆசிரியர் குமரேசன், இப்போது டாட்காம் ஆசிரியர் பீர் முஹம்மது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரா.சிந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாவலன்,கேம்பஸ் பிரண்ட் நிர்வாகி கஸ்ஸாலி, மநீதி அமைப்பின் செல்வி உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் உமர் பாரூக்,தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சலீம் ,தென் சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் அன்சாரி, மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன், வட சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முஹம்மது பிலால், தென் சென்னை மாவட்ட துணைத்தலைவர்கள் அப்துல் மஜீத், ராவுத்தர், செயலாளர் ஃபைரோஸ் பாபா, பொருளாளர் சுஜாவுதீன் உட்படக் கட்சியின் மாவட்ட, தொகுதி மற்றும் கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் எனப் பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT