Demonstration in Chidambaram

சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதன் மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர், சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 7-ந் தேதி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறுகிறது. தமிழக மக்கள் விரும்பாத திட்டங்களை மத்திய அரசு திணிக்கிறது. மக்கள் கேட்கும் திட்டங்களை தர மறுப்பதாகவும் மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார்.

Advertisment

போராட்டத்திற்கும் பிறகும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், அதன் பிறகு அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறினார்.