ADVERTISEMENT

நெல்லையில் பலியான மாணவர்கள் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்! 

12:49 PM Dec 17, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நெல்லையில் அரசு உதவிபெறும் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மீட்பு படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லையில் பொருட்காட்சித் திடல் அருகே எஸ்.என். ஹைரோடு பகுதியில் உள்ள டவுன் சாஃப்டர் தனியார் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை சுவர் இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 8ஆம் வகுப்பு பயின்றுவந்த இரண்டு மாணவர்கள் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 3 மாணவர்களை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் அழைத்துச் சென்றனர். இதில், ஒரு மாணவர் மருத்துவமனைக்குப் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், அம்மாணவர்களின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நெல்லை டவுன் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்; மூவர் காயமடைந்தனர் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு தரமான மருத்துவமும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடும் அரசு வழங்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT