ADVERTISEMENT

பள்ளி மாணவி மயங்கி விழுந்து சாவு: டாக்டர்கள் இல்லாததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்!

04:00 PM Jun 07, 2018 | Anonymous (not verified)



ADVERTISEMENT


ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சு. கீணனூரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (45), கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார், இவரது மகள் மகாலட்சுமி (13), இவர் கம்மாபுரம் அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல இன்று காலையில் பள்ளிக்குச் சென்றார்.

அப்போது திடீர் என மயங்கி விழுந்தார், உடன் மாணவ, மாணவிகள் அவரை மீட்டு கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுச் சென்றனர். அங்கிருந்த செவிலியர்கள் பரிசோதித்தப் போது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார்கள்.


இது குறித்து அறிந்த பள்ளி மாணவர்களும், உறவினர்களும் திரண்டு வந்து மாணவியின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். அப்போது டாக்டர்கள் இல்லாததால் தான் அந்த மாணவி இறந்ததாக கூறி விருத்தாசலம் _ சிதம்பரம் சாலையில் தீடீர் என சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.


தகவல் கிடைத்து விரைந்து வந்த கம்மாபுரம் போலீசார் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை சமாதானப்படுத்தினார்கள், அதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர். உடன் பிரேதத்தை மீட்ட போலீசார் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT