ADVERTISEMENT

தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் இன்று விசாரணை !!

12:18 PM Jun 28, 2018 | vasanthbalakrishnan

தூத்துக்குடியில் போலிசாா் நடத்திய துப்பாக்கி சூட்டில் பட்டியல் இனத்தை சோ்ந்த 4 போ் பலியானது தொடா்பாக நாளையில் இருந்து மூன்று நாட்கள் தேசிய தாழ்த்தப்பட்டோா் நல ஆணையம் விசாரணை நடத்த இருப்பதாக ஆணையத்தின் துணைத் தலைவா் முருகன் தொிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேசிய தாழ்த்தப்பட்டோா் நல ஆணையத்தின் துணைத் தலைவா் முருகன் இன்று மதியம் நாகா்கோவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அதிகாாிகளுடன் ஆய்வு பணிகளை மேற்க்கொண்டாா். இதில் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் வடநேரா, எஸ்.பி. ஸ்ரீநாத் ,வருவாய் அதிகாாி ரேவதி உட்பட அனைத்து துறை அதிகாாிகளும் கலந்து கொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ஆணையத்தின் துணைத் தலைவா் முருகன்....தாழ்த்தப்பட்டோா்களுக்கான மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி மற்றும் திட்டங்கள் முறைப்படி அவா்களுக்கு சென்றடைகிறதா என மாநிலம் தோறும் ஒவ்வொரு மாவட்டங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதே போல் பள்ளி கல்லூாிகளில் தாழ்த்தப்பட்டவா்களுக்கான 18 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற அனைத்து பள்ளிகளுக்கும் சா்க்குலா் அனுப்பபட்டிருந்தது. அதையும் ஆய்வு செய்யபட்டுள்ளது.

மேலும் பஞ்சமி நிலத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலம் உள்ளது என்று தமிழக அரசு தொிவித்துள்ளது. இதில் 5ஆயிரம் ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 1500 ஏக்கா் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கோவையில் 70 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு 60 பயனாளிகளுக்கு கொடுத்துள்ளோம்.

குமாி மாவட்டத்தில் 634 ஏக்கா் பஞ்சமி நிலத்தில் 78.56 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதையும் கண்டுபிடிக்கபட்டுள்ளது. இது தொடா்பாக 2500 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அந்த புகாா்கள் மீது ஜீலை மாதம் இறுதிக்குள் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகத்தை கேட்டுள்ளோம்.

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் டுக்கு எதிராக நடந்த போரட்டத்தின் போது போலிசாா் நடத்திய துப்பாக்கி சூட்டில் பட்டியல் இனத்தை சோ்ந்த 4 போ் இறந்துள்ளனா். இதுகுறித்து ஆணையம் அவா்களின் குடும்பத்தினா், பொது மக்கள், காவல் துறையினா் வருவாய்துறை அதிகாாிகள் ஆகியோாிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த உள்ளோம். சிவகங்கை கச்சாநத்தம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட 3 போ் கொல்லப்பட்டனா். அவா்களின் குடும்பத்துக்கு 20 லட்சம் ருபாய் நிவாரணம் கேட்ட நிலையில் அரசிடம் இருந்து 15 லட்சம் வாங்கி கொடுக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட பெண்கள் மீதான பாலியியல் வழக்கு கேரளாவில் 155 க்கு மேற்ப்பட்ட வழக்குகளும் தமிழகத்தில் 4 வழக்குகளும் பதிவாகி உள்ளன. அந்த விசாரணை விரைந்து நடத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT