ADVERTISEMENT

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை! சதுரகிரி வெள்ளப்பெருக்கில் மாட்டிக்கொண்ட பக்தர்கள்!

07:47 AM Nov 10, 2019 | santhoshb@nakk…

நான்கு திசைகளிலும் மலைகளால் சூழப்பட்டிருப்பதே சதுரகிரி ஆகும். மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்டம், தேனி மாவட்டம் என மூன்று மாவட்டங்களில் இருந்தும் சதுரகிரிக்குச் செல்வதற்கு மலைப்பாதைகள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சதுரகிரியில் அமைந்துள்ள மலைக்கோவில்தான் சுந்தர மகாலிங்கம் கோவில்.

ADVERTISEMENT


இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோவிலுக்கு வழக்கம்போல் பக்தர்கள் கூட்டம் சென்றது. மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை பெய்ததால் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், இருநூறுக்கும் மேற்பட்டோர் மலையிலிருந்து கீழே இறங்க முடியாமல் தவித்தனர். அவர்கள் மலைக்கோவிலில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களில் பலரும் மலையைவிட்டு இறங்கிவிட்டனர் என்றும் மாட்டிக்கொண்ட 15 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர் என்றும் சம்பந்தப்பட்ட துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT


மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 1977-ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆடி அமாவாசை விழாவுக்காக சதுரகிரிக்கு வந்த பக்தர்களில் 100 பேர் வரை பலியானார்கள். 2015-ல் வைகாசி வெள்ளிக்கிழமை விழாவை முன்னிட்டு இம்மலைக்கு வந்த பக்தர்கள் திடீர் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 8 பேர் வரை பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT