ADVERTISEMENT

"சசிகலாவின் செயல் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

09:12 PM Oct 20, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா என அக்டோபர் 17- ஆம் தேதி கல்வெட்டு திறக்கப்பட்டது. இதற்கு அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என கல்வெட்டு திறப்பு குறித்து சசிகலா மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எனக் கல்வெட்டு திறப்பது சட்டத்திற்குட்பட்ட செயல் அல்ல. சட்டத்தை மதிக்காமல், உள்நோக்கத்தோடு திட்டமிட்டு சசிகலா செய்வது ஏற்கத்தக்கதல்ல. சசிகலா மீது மோசடி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனப் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு தி.மு.க. உதவி செய்கிறது. குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் அ.தி.மு.க. பெயரை சசிகலா பயன்படுத்தி வருகிறார். சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் அ.தி.மு.க." என்று தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT