ADVERTISEMENT

அதிமுகவை உரிமை கோர சசிகலாவுக்கு உரிமை இல்லை! ஓபிஎஸ் அதிரடி! 

11:50 AM Nov 11, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்தது 2017இல் கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு. இதற்கான தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் நிறைவேற்றினர். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருந்தார் சசிகலா. அந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை நீதிபதி ஸ்ரீதேவி விசாரித்துவருகிறார்.

நேற்று (10.11.2021) நடந்த விசாரணையின்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயணன் ஆஜராகியிருந்தார். அவர் வாதாடும்போது, “தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவை அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியதை ஏற்றுக்கொண்டுள்ளன. இதனை மறைத்து கட்சியின் பொதுச்செயலாளர் நான்தான் என தவறான தகவலை அவர் தெரிவித்துவருகிறார். ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருக்கிறது. அந்த வகையில் அதிமுக கட்சியில் சசிகலா இல்லை.

அதனால் கட்சியை உரிமை கோர எந்த உரிமையும் அவருக்கு இல்லை” என்று அழுத்தமான வாதங்களை முன்வைத்திருக்கிறார். திண்டுக்கல் சீனிவாசன் தரப்பிலும் இதே பாணியில் வாதிடப்பட்டது. அதிமுக தரப்பிலான வாதங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இனி சசிகலா தரப்பின் வாதங்களை முன்வைப்பதற்காக விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. சசிகலா தரப்பின் வாதத்தை அடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அதிமுக தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT