Sasikala

Advertisment

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனைநிறைவடைந்ததை அடுத்து விடுவிக்கப்பட்ட சசிகலா,பெங்களூருபுறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். வரும்பிப். 8 ஆம் தேதி காலை9 மணிக்கு சசிகலாதமிழகம் வருவார் என டி.டி.வி.தினகரன்சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகிகள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட, போஸ்டர், பேனர் வைத்த அதிமுகவினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று(05.02.2021) தென்காசியில் திருமலைக்கோவிலில் சாமிதரிசனம் செய்த டி.டி.வி.தினகரன்செய்தியாளர்களைச் சந்திக்கையில், “தீயசக்திதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சசிகலா நிச்சயம் போட்டியிடுவார். டிஜிபியிடம் அல்ல, முப்படை தளபதிகளிடம் புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.”என்றார்.

 Sasikala returning to Tamil Nadu ... EPS, OPS sudden consultation today!

Advertisment

இப்படி பல்வேறு அரசியல் சலசலப்புகளுக்கு மத்தியில்வருகிற8-ஆம் தேதி திங்கள்கிழமை சசிகலா சென்னை வரவுள்ள நிலையில், அதிமுகவினர் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களுடன் மாலை 5 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.