ADVERTISEMENT

கடத்தல் மணல் லாரியை பிடித்து வந்த எஸ்.ஐ... போகச் சொன்ன இன்ஸ்பெக்டர்...!

07:10 PM Jan 08, 2020 | Anonymous (not verified)

தமிழ்நாட்டில் மணல் கொள்ளையர்கள் அதிகரித்த பிறகு ஆற்று மணல் திருடப்பட்டு ஆறுகள் காணாமல் போய் வருகிறது. இதனால் குடிக்க தண்ணீரை ரூ. 10 பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதைப் பார்த்தாவது மணல் கொள்ளையர்கள் திருந்துவார்களா என்றால் திருந்துவதற்கு வழியில்லை. இந்த மணல் கொள்ளைக்கு அதிகாரிகளே துணை போவது தான் வேதனை.

ADVERTISEMENT

ADVERTISEMENT


புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி பகுதியில் உள்ள அக்னி ஆற்றில் இருந்து மணல் திருடப்பட்டு தஞ்சை மாவட்டங்களில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு வரை கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. அருண்சக்திகுமார் மணல் கடத்தல் உள்ளிட்டவற்றை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கொள்ளை ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் அக்னி ஆற்றில் குரும்பிவயல் கிராமத்தில் மணல் திருடி தஞ்சை மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை அறிந்து வடகாடு போலீசாரும், வருவாய் துறையினரும் வழித்தடத்தை உடைத்து எச்சரிக்கை பதாகை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தான் ஒரத்தநாடு பகுதிக்கு தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் இருந்து தொடர்ந்து மணல் கடத்தி வரப்படுவதை அறிந்து ஒரத்தநாடு காவல் உதவி ஆய்வாளர் விஜய்கிருஷ்ணன் இரவு சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு மணல் லாரியை பிடித்து காவலர் குடியிருப்பு வளாகத்தில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு தூங்கச் சென்றுவிட்டார். அவர் லாரியை பிடித்த தகவல் பல இடங்களுக்கும் பரவியதும் பலரிடம் இருந்தும் போன். அதனால் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தூங்கிவிட்டார்.



ஆனாலும் அந்த லாரியை எடுத்துச் செல்ல முயன்ற பலரும் அதிகாலை நேரத்திலும் தஞ்சை மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள ஒரு ஆய்வாளருக்கு தொடர்பு கொண்டு சொல்ல, அந்த ஆய்வாளர் உடனே காவல் நிலையத்தில் இருந்த ஒரு காவலரின் செல்போனில் தொடர்பு கொண்டு தூங்கிக் கொண்டிருந்த உதவி ஆய்வாளரிடம் கொடுக்கச் சொல்லி அந்த கடத்தல் மணல் லாரியை விட செய்துள்ளார்.

ஆனால் விடியும் போது போலீசார் பிடித்து வந்து நிறுத்திய கடத்தல் மணல் லாரியை காணவில்லை என்று பொதுமக்கள் பேசிக் கொண்டனர். நடந்த உண்மையை அறிந்த மக்கள் நித்திரை இழந்து புடிச்சு வந்த கடத்தல் மணல் லாரியை சாதாரணமாக விடச் சொன்ன ஆய்வாளர் மேல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

ஆனால் காவல் துறையில் இருக்கும் பலருக்கு, தஞ்சை மாவட்டத்தில் மணல் கடத்தல் நடப்பது மாவட்டத்தில் உள்ள அத்தனை காவல் உயர் அதிகாரிகளுக்கும் தெரியும். அவர்களின் உதவியில் தான் எல்லாம் நடக்குது. அப்படித் தான் 2 மாதம் முன்னால் கறம்பக்குடி லாரி பிடிபட்டதும் காவல் உயர் அதிகாரியே காவல் நிலையத்திற்கு போன் செஞ்சு லாரி ஓனரை விடச் சொன்னார். இப்படித் தான் நடக்கிறது என்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT