ADVERTISEMENT

சாமி சிலைகள் உடைப்பு: ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பு

01:54 PM Oct 21, 2019 | rajavel

ADVERTISEMENT

சாமி சிலைகள் உடைப்பு விவகாரம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள அம்மன் கோயில் என்ற பகுதியில் பொன் காளியம்மன் கோயில் உள்ளது. இது இந்துசமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்டது இந்தக் கோயில். கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தின் சில பிரிவினர் இதை குலதெய்வமாக வழிபாடு செய்கிறார்கள்.


இந்த கோயிலுக்கு அருகே தொப்ப பாளையம் என்ற இடத்தில் இக்கோயிலின் மூதாதையர்கள் என சொல்லப்படும் காளியண்ணன் சிலைகள் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலைகளை சுற்றி இரும்பாலான காம்பவுண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.




இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் முகமூடி அணிந்துகொண்டு காம்பவுண்ட் உடைத்து உள்ளே சென்று இரண்டு சாமி சிலைகளையும் சுத்தியலால் அடித்து உடைத்து விட்டனர். இன்று காலையில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட மக்கள் பதட்டம் அடைந்தனர். இந்த செய்தி காட்டுத் தீ போல ஈரோடு மாவட்டம் முழுக்க பரவியது. பல ஊர்களிலிருந்து நூற்றுக்கணக்கானோர் கோயிலுக்கு விரைந்தனர். இத்தகவல் கேள்விப்பட்ட போலீசாரும் பெரும்படையுடன் அங்கு சென்றனர் இந்த நிலையில் அப்பகுதி முழுக்க சாலைமறியல் கடையடைப்பு என பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது


உயர் போலீஸ் அதிகாரிகள் முதல் நூற்றுக்கணக்கான போலீசார் வரை அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் சாமி சிலைகள் உடைப்பு விவகாரம் சாதிய கலவரமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு சமூகத்தை சேர்ந்த சமூக விரோதிகள் இச் சிலைகளை உடைத்து திட்டமிட்டே சாதி கலவரத்தை உருவாக்க முனைந்துள்ளார்கள் என பொதுமக்கள் கூறுகிறார்கள். சிலைகள் உடைப்பு விவகாரம் கொங்கு மண்டல மாவட்டங்களில் பதட்ட நிலையை ஏற்படுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT