Skip to main content

பெரியார் மண்ணில் அம்பேத்கருக்கு சிலை...!

Published on 26/01/2022 | Edited on 26/01/2022

 

Statue for Ambedkar in Periyar soil ...! -DMK's commendable act!

 

சுயமரியாதை சுடரொளி தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் பெரியார் சிலை அருகே சட்டமேதை, புரட்சியாளர் டாக்டர்.அம்பேத்கருக்கு சிலை திறக்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்திருந்தது. இதன் தொடர்ச்சியாக சென்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு ஈரோடு வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா முகப்பில் அமைந்துள்ள தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் சிலைகள் உள்ள அதே பீடத்தில் புரட்சியாளர் அம்பேத்கருக்கும்  திமுக சார்பில் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

 

ஆட்சிக்கு வந்த பிறகு அந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாக இல்லாமல் சொன்னதை செய்வோம் என்ற அடிப்படையில் அண்ணல் அம்பேத்கருக்கு சிலை திறக்க விரைந்து செயல்படுமாறு தி.மு.க, மா.செ.வும் ஈரோடு மாவட்ட அமைச்சருமான முத்துச்சாமிக்கு உத்தரவிட்டிருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

அதன் அடிப்படையில் சென்ற சில மாதங்களுக்கு முன்பே ஐதராபாத்தில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை தயார் செய்யப்பட்டு வந்தது. லட்சக்கணக்கில் செலவான சிலை தயாரிப்புக்கு உண்டான தொகையை தி.மு.க. ஏற்றுக் கொண்டது. இந்தநிலையில் ஈரோட்டில் அம்பேத்கர் சிலை வைக்க சென்ற 22 ந் தேதி தமிழக அரசு சார்பில் முறையாக அனுமதியும் கொடுக்கப்பட்டது.

 

ஜனவரி 26 இந்திய குடியரசு தினத்தன்று இந்தியாவின் சட்டமேதையான அம்பேத்கரின் சிலையை, திராவிட இயக்கத்தின் குருகுலமான ஈரோட்டில்  அம்பேத்கருக்கு உற்ற நண்பராக இருந்த பகுத்தறிவு தந்தை, தந்தை பெரியார் சிலை அருகே அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டு அதைச் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் திறப்பு விழா செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

Statue for Ambedkar in Periyar soil ...! -DMK's commendable act!

 

"சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்கள், தமிழ்நாட்டின் பங்கு, தியாக நெருப்பில் அணையா ஜோதியாக உள்ளது. இந்திய விடுதலை போராட்டத்தில் உயிரை ஆயுதமாகக் கொடுத்த ஆயிரக்கணக்கான தேசத்தின் கொடையாளர்களான தமிழர்களின் வீரஞ்செறிந்த வரலாற்றை மத்திய பா.ஜ.க.மோடி அரசு மறுதலித்து நாட்டு மக்களுக்குக் காட்சிப்படுத்த மறுத்தாலும் இந்திய மண் சுதந்திர சுவாசக் காற்றை சுவாசிக்க செங்குருதி சிந்திய தமிழக தலைவர்களின் வீரம் போற்றப்படும் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலினின்  செயல்பாடுகள் மூலம் மக்கள் அறிந்து வருகிறார்கள்.

 

உயர் சாதிகளான மேட்டுக்குடிகள் மட்டுமே கல்வி, வேலைவாய்ப்புகள், அரசியல் அதிகாரத்தில் முன்னிலை பெற முடியும் என்ற இழி நிலையை மாற்றி இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதை சட்ட அங்கீகாரம் பெற்றுத்தந்த சட்ட மேதை அம்பேத்கரை ஒரு மராட்டியராக பார்க்காமல் சிறந்த ஆளுமை மிக்க மனிதராக, இந்திய நாட்டின் ஒரு தலைவராக பார்த்ததினால் தான் ஈரோட்டு மண்ணிலும் அவருக்கு சிலை வைத்து மனித குலம் போற்ற வேண்டும் என புகழ் வணக்கம் செய்திருக்கிறது தி.மு.க....! மத அரசியல் வடிவமான ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க.வுக்கும்  மனித குல விடுதலையை முன்னெடுக்கும் திராவிட இயக்கத்திற்கும் இது தான் சுய மரியாதை உணர்வாளர்களின் ஒப்பீடு..." என்றார்கள் சிலை திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட திராவிட இயக்க பற்றாளர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.