ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு! சேலம் வாலிபர் கைது பின்னணியில் பரபரப்பு தகவல்கள்!!

06:55 PM Jun 02, 2018 | rajavel

ADVERTISEMENT

முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு போஸ்டர் வடிவமைத்து வாட்ஸ்அப் செயலியில் பகிர்ந்ததாக சேலம் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டியைச் சேர்ந்த சுந்தரம் மகன் விஜயகுமார் (28). அந்தப் பகுதியில் சொந்தமாக செங்கல் சூளை வைத்திருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி வாட்ஸ்அப் செயலி மூலம் அவதூறு கருத்துகளை பரப்பியதாக தம்மம்பட்டி காவல்துறையினர் திடீரென்று நேற்று அவரை கைது செய்தனர்.

விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி சேலம் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் ஸ்ரீகுமரன் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது.

இதுகுறித்து நாம் விசாரித்தபோது வேறு சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கடந்த மே 22ம் தேதி, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாயினர். அந்த சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக அப்போது சிலர், அரசுக்கு எதிரான கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தனர்.


அந்த வகையில் வந்த அவதூறு போஸ்டரை சமூக ஊடகங்களில் பரப்பியது விஜயகுமார்தான் என்ற புகாரின்பேரிலேயே அவரை தம்மம்பட்டி காவல்துறையினர் கைது செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கடந்த மாதம் 26ம் தேதி கொடுக்கப்பட்ட புகாரில், சாவகாசமாக நேற்று கைது நடவடிக்கை மேற்கொண்டதிலும் உள்நோக்கம் இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட விஜயகுமார், தற்போது திமுகவில் உறுப்பினராக உள்ளார். உண்மையில், அவர்தான் இந்த போஸ்டரை சமூக ஊடகங்களில் பரப்பினாரா? அல்லது எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் நோக்கத்தில் காவல்துறையினர் இத்தகைய அடக்குமுறைகளை கையாள்கின்றனரா? என்ற சந்தேகங்களையும் சிலர் கிளப்பி உள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT