Skip to main content

இளவரசியை சுற்றிப்பார்த்த எடப்பாடி...

Published on 20/05/2018 | Edited on 20/05/2018

அரை நூற்றாண்டு காலமாக  நடைபெற்று வரும் கோடை மலர் கண்காட்சியை இதுவரை அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் தான் திறந்து வைத்து இருக்கிறார்கள். இந்த ஆண்டுதான் முதல் முறையாக முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்.  இதற்காக கடந்த  18ம் தேதியே கோடைக்கு விசிட் அடித்த முதல்வர் அங்குள்ள பிரபல கால்டன் ஹோட்டலில் தங்கினார். மறுநாள் 19ம் தேதியான நேற்று மதியம் கோடை பிரையண்ட் பூங்காவில் உள்ள மலர்கண்காட்சியை திறந்து வைத்தார்.  அதன் பின் அங்குள்ள  பல வகையான மலர்களை பார்த்து ரசித்தார்.  அதுபோல் ஜல்லிக்கட்டு காளை மற்றும் யானை போன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டதையும் பார்த்து ரசித்து விட்டு  அங்குள்ள விழா மேடைக்கு ஏறினார். ஆனால் முதல்வர் வருகையையொட்டி போலீசார் கெடுபிடி  செய்ததால் பெரும்பலான சுற்றுலா பயணிகள்  பூங்காவுக்குள் வரமுடிய வில்லை  இதனால்  முதல்வர் வந்தும் கூட எதிர்பார்த்த கூட்டம் இல்லை.கட்சிகாரர்களையும் சரிவர அனுமதிக்கவில்லை. 

 

edapadi

 

விழா மேடையில்  பேசிய அதிகாரிகளும்,அமைச்சர்களும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியது போலவே எடப்பாடியையும் புகழந்து பேசினார்கள். இதில்  வனத்துறை அமைச்சர் சீனிவாசனும்,வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணும் ஒரு படி மேலே போய்,  லட்சபோபலட்சம் மக்களின்  ஆதரவு பெற்று வரும் எடப்பாடியார் தான் நிரந்தர முதல்வர்  என புகழ்ந்து பேசினார்கள். ஆனால்  இந்த விழாவில்  துணை முதல்வர் ஒபிஎஸ்  கலந்து  கொள்ளவில்லை  என்பதால் அமைச்சர் சீனிவாசனை தவிர யாரும் துணை முதல்வரான ஒபிஎஸ்  பெயரை செல்லவில்லை. இது கட்சிகாரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
 

edapadi

 

இந்த நிலையில்தான் இறுதியாக மைக்கை பிடித்த முதல்வர் எடப்பாடியோ.... இருபது மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்க கூடியகாவிரி நதி நீர்  பிரச்சினைக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நல்ல தீர்ப்பு கிடைத்து இருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என எதிர்கட்சிகள்  குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால் மற்ற மாநிலத்தை விட தமிழ்நாடு  சிறப்பாக  செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்தியா அளவில்  ஆய்வு நடத்தியதில்  கோவையில் உள்ள  ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் சிறப்பாக செயல்படுகிறது என முதல்பரிசு வாங்கி  இருக்கிறது. அதுபோல் சென்னை  அண்ணா நகரில் உள்ள  காவல் நிலையமும் ஐந்தாவது  இடம் பெற்றுள்ளது. அந்த  அளவுக்கு தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே செயல்பட்டுவருகிறது. மேலும் ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானலில்  உள்ள  சுற்றுலா தளங்களை சுற்றுலா பயணிகளின் குறைகளை கேட்டு செயல்படுத்தபடும் என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்