ADVERTISEMENT

நள்ளிரவில் சாலை விபத்து... உதவிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

01:10 PM Feb 06, 2020 | santhoshb@nakk…

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் எதிரே 3 கோடி ரூபாய் செலவில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டது. அதனை திறந்து வைக்கும் நிகழ்ச்சி பிப்ரவரி 6- ஆம் தேதி (இன்று) காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனை ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்துவைப்பார் என அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதற்காக கோவையில் இருந்து திருவண்ணாமலைக்கு பிப்ரவரி 5- ஆம் தேதி இரவு கார் மூலமாக புறப்பட்டு வந்துக்கொண்டு இருந்தார் அமைச்சர் வேலுமணி. இந்நிலையில் சேலம்- ஆத்தூர் பைபாஸ் ராமஸ் ஹோட்டல் அருகில் இரவு 11.35 மணியளவில் தனியார் பேருந்தும்- லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அப்போது ஆத்தூர் வழியாக சென்று கொண்டிருந்த நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, விபத்து நடந்ததை பார்த்துவிட்டு உடனே தனது காரை நிறுத்திவிட்டு விபத்து நடந்த இடத்துக்கு சென்றுள்ளார்.

விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் அமைச்சர் நேரடியாக இறங்கியுள்ளார், அவரது உதவியாளர் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தொடர்பு கொண்டு தகவல் கூறியுள்ளார். அதற்குள் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. உடனே காயமடைந்தவர்களை ஏற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். மேலும் மருத்துவர்களிடம் படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையை உடனே மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அதன் பிறகு அமைச்சர் திருவண்ணாமலைக்கு புறப்பட்டார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT