
பரோட்டாவுக்குகூடுதலாக குருமா கேட்டவர் அடித்துகொல்லப்பட்ட சம்பவம் கோவையில்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த கருப்பசாமி என்பவர் அந்தப் பகுதியில் உணவகம் ஒன்றைநடத்தி வந்திருக்கிறார். அந்த உணவகத்திற்கு கோவை முத்துக்கவுண்டன்புதூரைச் சேர்ந்தஆரோக்யராஜ் என்பவர் பரோட்டா பார்சல்வாங்க வந்துள்ளார். அப்பொழுது பார்சல்கட்டப்பட்டபரோட்டாவுக்குக் கூடுதலாக குருமா கேட்டுள்ளார் ஆரோக்யராஜ். இது தொடர்பாக கடை உரிமையாளரான கருப்பசாமிக்கும் ஆரோக்யராஜுக்கும்இடையேவாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிய, கருப்பசாமியும்உணவகஊழியர்களான கரிகாலன், முத்து ஆகிய மூன்றுபேரும் ஒன்றாக ஆரோக்யராஜை தாக்கியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே ஆரோக்யராஜ் மயங்கி விழுந்துள்ளார். அதன்பின்னர் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று சிகிச்சைக்கு சேர்த்தபோது ஆரோக்யராஜ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்தொடர்பாக போலீசார் உணவகஉரிமையாளர் கருப்பசாமி, உணவக ஊழியர் கரிகாலன் ஆகியோரைக் கைது செய்தனர். மூன்றாவது நபரானமுத்து தப்பித்துச் செல்ல முயற்சித்த நிலையில், அவரை பொதுமக்கள் பிடித்து தாக்கியதில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருகிறார்.
பரோட்டா குருமாவுக்காக ஏற்பட்ட இந்த உயிரிழப்பு சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இறந்த ஆரோக்யராஜுக்கும் உணவகஉரிமையாளர் கருப்பசாமிக்கும்ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாகவும்கூறப்படும் நிலையில், அதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)