ADVERTISEMENT

சகஜானந்தா 132வது பிறந்தநாள் விழா.. மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை! 

05:23 PM Jan 27, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் ஏழை எளிய மக்கள் கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பெயரில் பள்ளிகளை நிறுவிய சுவாமி சகஜானந்தாவின் 132-வது பிறந்த நாளையொட்டி நந்தனார் ஆண்கள் பள்ளியின் வாயிலில் அவருக்கு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அவரது மணி மண்டபத்தில் வியாழக்கிழமை கடலூர் ஆட்சியர் (பொறுப்பு) ரஞ்சித்சிங் கலந்துகொண்டு சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இவருடன் காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன், சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. பாண்டியன், சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, வட்டாட்சியர் ஆனந்த் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அதேபோல் நந்தனார் பள்ளிகளின் ஆசிரியர்கள், சிதம்பரம் முன்னாள் முனிசிபல் ஊராட்சி தலைவர் பத்மசுந்தரி உமாநாத், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், நந்தனார் கல்வி கழக பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராதகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள். சகஜானந்தா பணிநிறைவு பெற்றோர் சமூக பேரவையின் நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, சி.தண்டேஸ், வரநல்லூர் ஊராட்சி தலைவர் மாரியப்பன், சுவாமி சகஜானந்தா சமூக பேரவை மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிய முன்னாள் மாணவர்களுக்குப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கபட்டது. இதில் கலந்துகொண்ட அனைவரும் சுவாமி சகஜானந்தா புகழ் ஓங்குக எனக் கோசங்களை எழுப்பினார்கள் பின்னர் அனைவரும் பள்ளியின் கல்வி வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதேபோல் பள்ளியின் வாளத்தில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சுவாமி சகஜானந்தா 35 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும் 7 ஆண்டுகள் சட்ட மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அவரது கல்வி பணிகளைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு அவருக்கு மணி மண்டபம் கட்டியது என்பது குறிப்பிடதக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT