ADVERTISEMENT

கோயிலுக்கு சென்றபோது சோகம்; ஆற்றில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு! 

04:49 PM Oct 08, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் ஜெகநாதன் ஆகிய இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கொம்பாடிபட்டியில் உள்ள தங்கள் குலதெய்வமான பெருமாள் கோவிலுக்கு வந்துள்ளனர். இவர்கள், லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் தீர்த்த குடம் எடுத்துச் செல்ல குடும்பத்துடன் வந்து அங்கு குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நாகராஜ் மகன் விஷ்வா (24), ஜெகநாதன் மகன் புருஷோத்தமன் (18) ஆகிய இருவரும் ஆற்றின் புதை மணலில் சிக்கியுள்ளனர். அதேசமயம் அங்கு தண்ணீர் வரத்து அதிகமானதால் அவர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களுடன் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களும் தண்ணீரில் அடித்துசெல்லப்பட்டுள்ளனர்.

இதில், அந்த இரு பெண்களும் அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினரால் மீட்கப்பட்டுள்ளனர். இரு இளைஞர்களையும் அவர்களால் மீட்க முடியாமல் போக, முசிறி தீயணைப்பு துறையினருக்கும் லாலாபேட்டை காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது முசிறி தீயணைப்புத் துறையினர் மற்றொரு இடத்தில் மீட்பு பணியில் ஈடுபடுவதாக தெரிவித்ததால் கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு துறை வீரர்கள் வருவதற்கு தாமதமானதால் லாலாபேட்டை காவல் ஆய்வாளர் ஜோதி தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்களின் உடலை தேடிவந்தநிலையில், புருஷோத்தமன் என்ற இளைஞரை இறந்த நிலையில் மீட்டனர். அதன்பிறகு சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்துவந்த கரூர் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு மற்றொரு இளைஞரின் உடலை தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT