RD Malai Jallikattu... loses sight

தமிழகத்தில் பல இடங்களில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டுமற்றும்எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. உலக அளவில் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அதேபோல் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி மலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இதுவரை 417 காளைகள் பங்கேற்றுள்ளது. இதுவரை 27 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் சிவக்குமார் வயது (21) என்பவரது கண் பாதிக்கப்பட்டுபார்வை பறிபோனது.

Advertisment

இரண்டாம் சுற்று முடிவு வரை 13 மாடுபிடி வீரர்கள், 2 பார்வையாளர்கள், ஒரு மாட்டின் உரிமையாளர் என 16 பேர் காயமடைந்துள்ளனர். நான்காவது சுற்றின்போது சோர்வின் காரணமாக தடுப்பு வேலிகம்பி ஓரமாக அமர்ந்திருந்த பள்ளப்பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர் வடசேரி சிவகுமார் (21) என்ற இளைஞரை மாடு குத்தியதில் வலது கண் பார்வை பறிபோனது. காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.