ADVERTISEMENT

சபரிமலை பக்தர்களே குறி; 4,000 கிலோ மஸ்கோத் அல்வா பறிமுதல் 

10:05 PM Jan 04, 2024 | kalaimohan

குற்றாலத்தில் ஒரே நாளில் கிலோ கணக்கில் கெட்டுப்போன சிப்ஸ், அல்வா, பேரிச்சம்பழம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

தற்போது சபரிமலை சீசன் என்பதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த கையோடு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குளியல் போட்டுவிட்டு திரும்புவதை பெரும்பாலானோர் கடைபிடித்து வருகின்றனர். அப்படி சபரிமலையில் இருந்து வரும் பக்தர்களை குறி வைத்து குற்றாலத்தில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

ADVERTISEMENT

நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பல்வேறு கடைகளில் சிப்ஸ், அல்வா, பேரிச்சம்பழம் ஆகியவை விற்கப்படுகிறது. பல இடங்களில் காலாவதியான சிப்ஸ், அல்வா ஆகியவற்றை விற்பதாக புகார்கள் எழுந்தது. புகாரின் பேரில் குற்றாலம் லட்சுமி நகர் பகுதியில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்பொழுது காலாவதியான 2,900 கிலோ சிப்ஸ், 4,230 கிலோ மஸ்கோத் அல்வா மற்றும் 1060 கிலோ பேரிச்சம்பழ பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றாலம் பேரூராட்சியில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு ரசாயனம் தெளித்து அழிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் இதுபோன்ற காலாவதியான பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT