ADVERTISEMENT

'ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் 86,326 விண்ணப்பங்கள் வந்துள்ளன' -மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தகவல்!

02:30 PM Sep 29, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் (Right To Education- RTE) கீழ் மொத்தம் 86,326 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மொத்தம் 86,326 விண்ணப்பங்கள் வந்துள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது; அக்டோபர் 1- ஆம் தேதி குலுக்கல் நடைபெறும். குலுக்கலின்போது கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுடன் பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம். குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அக்டோபர் 3- ஆம் தேதி முதல் அக்டோபர் 7- ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT