ADVERTISEMENT

தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் ரூ.2.16 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியது - லஞ்ச ஒழிப்புத்துறை

06:31 PM Dec 15, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.2.16 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.


முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோர் இல்லங்களில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் சோதனை நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணியின் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல், ஈரோடு, சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தங்கமணி, அவருடைய மகன் தரணிதரன், அவருடைய மனைவி சாந்தி ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காலையில் துவங்கிய சோதனை சில இடங்களில் தற்போதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் இதுவரை 2.16 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT