ADVERTISEMENT

ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கு- சி.பி.சி.ஐ.டி.க்கு பரிந்துரை!

08:29 AM Aug 24, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 21- ஆம் தேதி சென்னை அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கஞ்சா வியாபாரி சங்கரை பிடிக்க முயன்றனர். காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் காவல் ஆய்வாளர் நடராஜன் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கர் மீது கொலை முயற்சி, கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. மேலும் அயனாவரத்தில் மாமூல் கேட்டு சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய வழக்குமுள்ளது.

என்கவுன்டர் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வந்த நிலையில், இது மனித உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க சென்னை காவல்துறை தரப்பில் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT