ADVERTISEMENT

பிரபல நடிகர் வீட்டில் கொள்ளை; 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

08:29 AM Nov 11, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரபல நடிகர் ஆர்.கே வீட்டில் 200 சவரன் தங்கநகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை டிபென்ஸ் காலனியில் வசித்து வருபவர் நடிகர் ஆர்.கே. இவர் எல்லாம் அவன் செயல், அவன் இவன், ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நேற்று அவரது வீட்டின் பின்புறமாக புகுந்த மர்ம நபர்கள் அவரது மனைவியைக் கட்டி போட்டுவிட்டு வீட்டிலிருந்த 200 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து புகார் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT