ADVERTISEMENT

புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத் தேவை!

06:29 PM Aug 19, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் உற்பத்திச் செய்யப்பட்ட மின்தேவையைப் பூர்த்திச் செய்ய மாநிலங்கள், தங்களுக்குள் மின்சாரத்தைக் கொடுத்து, வாங்கும் முறையைப் பின்பற்றுகின்றனர். புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் உற்பத்திச் செய்யப்பட்ட மின்சாரத்தைப் பொறுத்த வரையில் தமிழ்நாடு அதிகம் காற்றாலை மின் உற்பத்தியையே நம்பியுள்ளது.

புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் உற்பத்திச் செய்யப்பட்ட மின்சாரத்தைப் பூர்த்திச் செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறது. மேலும், தமிழ்நாட்டில் மின் தேவை அதிகரிக்கும் வேளையில் அம்மாநிலங்களிடம் இருந்து அனல் மற்றும் புனல் சக்திக் கொண்டு உற்பத்திச் செய்யப்பட்ட மின்சாரத்தைப் பெறுகிறது.

2003- ஆம் ஆண்டு மின் சட்டத்தின்படி, ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு நிதியாண்டும் தங்கள் மின்தேவையைக் குறிப்பிட்ட விகிதத்தை புதுப்பிக்கத் தக்க சக்தியால் உற்பத்திச் செய்யப்பட்ட மின்சாரத்தை கொண்டு ஈடு செய்ய வேண்டும். ஒவ்வொரு நிதியாண்டும் இந்த விதியினைப் பூர்த்திச் செய்யும் பொருட்டு உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு காற்றாலை மின்சாரம் தேவையாக உள்ளது.

தமிழ்நாட்டில் மே மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை காற்றாலை மின் உற்பத்தி அதிகம் உள்ள காலமாகும். இந்த காலங்களில் தமிழ்நாட்டில் தேவை குறைந்திருக்கும் நிலையில், வட மாநிலங்களுக்கு காற்றாலை மின்சாரத்தை வழங்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம். அக்டோபர் மாதம் தொடங்கி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வரையிலான கால கட்டத்தில் அம்மாநிலங்களில் இருந்து அனல் மற்றும் புனல் சக்திக் கொண்டு தயாரிக்கும் மின்சாரத்தைப் பெறுகிறது.

பிற மாநிலங்கள் தங்கள் ஒட்டுமொத்த மின் தேவையில் 0.16 விழுக்காடு முதல் 0.25 விழுக்காடு வரையில் புதுப்பிக்கத்தக்க சக்தியால் உற்பத்திச் செய்யப்பட்ட மின்சாரத்தைக் கொண்டு ஈடு செய்ய வேண்டும். மாநிலத்திற்கு மாநிலம் இந்த அளவு வேறுபடும் நிலையில், பல வட மாநிலங்கள் புதுப்பிக்கத்தக்க சக்தியால் உற்பத்திச் செய்யப்பட்ட மின் தேவைக்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உதவியை நாடுகின்றன.

குறிப்பாக, உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், காற்றாலைகளில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை வழங்க உள்ளது. நடப்பு நிதியாண்டில் 21 விழுக்காடு மின் தேவையைப் புதுப்பிக்கத்தக்க சக்தியால் உற்பத்திச் செய்யப்படும் மின்சாரத்தைக் கொண்டு, ஈடு செய்ய வேண்டிய நிலையில் உள்ள தமிழ்நாடு, அதில் 10.5 விழுக்காடு அளவிற்கு சூரிய ஒளியால் உற்பத்திச் செய்யப்படும் மின்சாரத்தை வாங்க வேண்டிய நிலையில் உள்ளது.

ஒவ்வொரு காற்றாலையிலும் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தும் நடவடிக்கையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் காற்றாலை மின் உற்பத்தி அளவைத் துல்லியமாக கணக்கிட்டு, விநியோக நடவடிக்கைகளைத் திட்டமிட முடியும் என்கின்றனர் அதிகாரிகள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT