/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SGD_2.jpg)
மின் உபயோகத்திற்கு ஏற்பதான் மின்கட்டணம் வசூலிக்க வேண்டும், நான்கு மாதத்திற்கு ஒரு முறை எடுத்து, அதைப் பிரித்து வசூலிக்க அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைதடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும்போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில், செலுத்தப்பட்ட தொகையை கழித்து விட்டு, மீத தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவை ரத்து செய்து, முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி ‘பில்’லாகவும், மீத யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான ‘பில்’லாகவும் நிர்ணயித்து, தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிடக்கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுதரப்பில்,மின் கட்டண கணக்கீடு முறையில் எந்த வித சட்ட விதி மீறலும் இல்லை. அனைத்து தரப்பு உபயோகதாரர்களுக்கு ஏற்ப கட்டணம் வகுத்து வசூலிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், மத்திய மின் சட்டம் பிரிவு 43(3)ல் சொல்லப்பட்டுள்ள மின் உபயோக கணக்கீட்டிற்கு ஏற்பதான் பணம் வசூலிக்க வேண்டும். கட்டணத்தை நான்கு மாதத்திற்கு ஒரு முறை எடுத்து,அதை இரண்டாகப் பிரிப்பதற்கு அதிகாரம் இல்லை என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)