ADVERTISEMENT

சிகிச்சை பெறுவோருக்கு கொடுக்கப்படும் உணவு பட்டியல் வெளியீடு!! 

07:26 PM Apr 26, 2020 | kalaimohan

தமிழகத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 60 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,020 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் தமிழகத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT


இந்நிலையில் கரோனா உறுதியாகி சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தரப்படும் உணவு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி காலை 4 மணிக்கு ரொட்டி, பிஸ்கட். 4.30 மணிக்கு கபசுரக் குடிநீர். இரவு 7 மணிக்கு பால்,வாழைப்பழம். இரவு ஒன்பது முப்பது மணிக்கு சாதம், சாம்பார், ரசம், பொரியல், முட்டை. இரவு 10 மணிக்கு சிறிது பூண்டுடன் பால்.

இதர நோயாளிகளுக்கு காலை 7 மணிக்கு காபி, பிஸ்கட் .காலை 8.30 மணிக்கு இட்லி சாம்பார் வழங்கப்படுகிறது. காலை 10 மணிக்கு கபசுரக் குடிநீர், காலை 11 மணிக்கு வேகவைத்த சுண்டல்/வேர்க்கடலை, எலுமிச்சைச்சாறு (உப்பு/சர்க்கரை) வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் ரமலான் நோன்பு கடைப்பிடிப்போருக்கு அதற்கு தகுந்தார்போல் உணவுகள் வழங்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT