ADVERTISEMENT

சிறு , குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைப்பு

07:05 PM Nov 09, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிறு, குறு நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10 % குறைக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின் கட்டணம் 25% லிருந்து 15% ஆகக் குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிறு மற்றும் குறு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று 10% மின்கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணத்தின்படி சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தைச் செலுத்த வேண்டி உள்ளது. இதனால் மின்கட்டணத்தைக் குறைக்கும்படி பல்வேறு குறு, சிறு நிறுவனங்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கொடுத்த கோரிக்கையினை ஏற்றுத் தொழில் நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாகக் குறைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மின்கட்டணத்தைக் குறைப்பதால் தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT