ADVERTISEMENT

மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி சடலமாக மீட்பு

04:51 PM Mar 30, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ள ஆவணிப்பூரை சேர்ந்தவர் அப்பாவு. இவரது மனைவி மல்லிகா(65). இருபது ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகாவின் கணவர் அப்பாவு இறந்து போனார். அதன்பின் தனது மூன்று சகோதரர்களுடன் மல்லிகா அதே ஊரில் வசித்து வந்துள்ளார். சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட மல்லிகா அப்பகுதியிலேயே சுற்றித்திரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று(29.3.2022) காலை ஊருக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் மல்லிகா உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். வயல் பகுதிக்கு வேலைக்குச் சென்றவர்கள் மல்லிகாவின் சடலத்தைப் பார்த்து அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வளத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மல்லிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மல்லிகாவின் சடலம் அருகே தூங்கிக் கொண்டிருந்த ஒரு இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சிறு நகரி என்ற ஊரைச் சேர்ந்த பார்த்திபன்(37) என்பது தெரியவந்தது.

தனது சொந்த வேலையாக திண்டிவனம் வந்த பார்த்திபன் டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்தியுள்ளார். அப்போது மனநிலை பாதித்த மல்லிகா பார்த்திபனிடம் இருந்து மது வாங்கி குடித்துள்ளார். மது குடித்த பார்த்திபன் போதையில் அதே இடத்தில் படுத்து தூங்கி விட்டதாக கூறுகிறார். ஆனால் மல்லிகாவின் உறவினர்கள் மதுபோதையில் பார்த்திபன் மல்லிகாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பார்த்திபனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த வளத்தி போலீசார் மல்லிகாவின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனநிலை பாதித்தவர் சடலமாக மீட்கப்பட்டது அவரது அருகில் ஒரு இளைஞர் போதையில் படுத்து இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT