ADVERTISEMENT

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

11:13 AM Aug 16, 2022 | kalaimohan

ADVERTISEMENT

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 2.10 லட்சம் பொறியியல் இடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.பி.இ, பி.டெக், பி.ஆர்க் உள்ளிட்ட படிப்புகளில் சேர மொத்தம் 1.69 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ADVERTISEMENT

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, ''இந்த ஆண்டு 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்குபெற உள்ளது. தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் என 431 கல்லூரிகள் பங்குபெற உள்ளன. இதில் அரசு ஒதுக்கீடுகள் 1,48,711 இடங்கள் உள்ளது. தனியார் கல்லூரிகளில் 65 சதவிகிதம் அரசு கோட்டா. இதில் அரசுப்பள்ளி 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் 10,968 இடங்கள். இந்த ஆண்டுமுதல் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகளில் தொழிற்கல்வி (vocational) பாடப்பிரிவு வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு 2 சதவிகித இட ஒதுக்கீடாக 175 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT