ADVERTISEMENT

ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி; தப்பிக்கும் திட்டமா?

10:39 PM Nov 04, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொல்லப்பட்டு 10 ஆண்டுகள் முடிவடைந்தும் கொலையாளிகள் பிடிபடாத நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. முதற்கட்டமாக 13 பேர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு உண்மை கண்டறியும் சோதனைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அடுத்த வாரம் மறு விசாரணை நடக்க உள்ளது.

இந்நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, குடவாசல் பகுதியில் மையம் கொண்டிருந்தது. மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த ஒரு ஊ.ம.தலைவரிடம் விசாரணை முடிந்துள்ள நிலையில் குடவாசல் பகுதியைச் சேர்ந்த ஒரு முக்கிய நபரிடம் விசாரணை செய்ய சிறப்பு விசாரணைக்குழு அழைப்பு கொடுத்திருந்தது. சில நாட்களாக வேலைப்பளு அதிகமாக உள்ளதாக சமாளித்த குடவாசல் புள்ளி இன்று தனக்கு உடல்நிலை சரியில்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். அதனால் தற்போது விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று கூறியுள்ளார். இப்படி காலங் கடத்துவதால் விசாரணையிலிருந்து விலக்கு பெற நினைக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

இதேபோல தொடக்கக் கால விசாரணை அதிகாரி ஒருவரும் விரைவில் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நிலை உள்ளதால் சற்று பதற்றத்தில் மாஜிக்களின் உதவியை நாடியுள்ளதோடு ஆளும் தரப்பையும் நாட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT