incident in pudukottai

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் தாலுகா, ஏம்பல் கிராமத்தில் கடந்த மாதம் 30 ந் தேதி காணாமல்போன 7 வயது சிறுமி,மறுநாள் அதே பகுதியில் உள்ள கிழவி தம்மம் ஊரணியில் உடலெங்கும் காயங்களுடன் செடி கொடிகளுக்கு மத்தியில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் கொலையாளியை உடனே கைது செய்ய உத்தரவிட்டார். அடுத்த சில மணி நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த சாமிவேல் (எ) ராஜாவை கைது செய்தனர்.

தொடர்ந்து முதலமைச்சர் நிவாரணம் அறிவிக்கப்பட்டதுடன், மாவட்ட நிர்வாக நிவாரணம் ஆகிய இரு நிவாரணங்களையும் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி வழங்கினார். இதனை தொடர்ந்து திமுக, காங்கிரஸ், தேமுதிக, உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் விஜய் ரசிகர்களும் நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்கள்.

incident in pudukottai

Advertisment

சிறுமியை இழந்து வாடும் குடும்பத்தினர் மனதளவில் பாதக்கப்படக்கூடாது என்பதற்காக மனநல ஆலோசனை வழங்க ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட மனநல திட்ட அலுவலர்மருத்துவர். கார்த்திக் தெய்வநாயகம் தலைமையில், மனநல சமூகப்பணியாளர்கள் கனகராஜ், முருகானந்தம், அஞ்சலி தேவி, மேரி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் வீட்டிற்கு சென்று மனநல ஆலோசனைகள் வழங்கியதுடன் மருந்துகளும் வழங்கினார்கள். மேலும் சிகிச்சை தேவைப்படும்போது சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியை நினைத்து,நினைத்து அவரது தாய் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த மருத்துவக் குழுவினர், சிறுமியின் தாய் மேலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சிகிச்சைக்காக 102 சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று அன்னவாசல் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மகளை பறிகொடுத்து மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள தாய்க்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவக்குழுவினர் கூறினார்கள்.