ADVERTISEMENT

ராமேஸ்வரம் கஃபே சம்பவம் தொடர்பாக ராமநாதபுரத்தில் சோதனை

10:10 AM Mar 05, 2024 | kalaimohan

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகத்தில் 01/03/2024 பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் குண்டு வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவி பலர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் சிக்கியவர்களை மீட்டனர். இந்த வெடி விபத்தில் மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. அதை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சென்னையில் மண்ணடி பகுதியில் பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மண்ணடி பகுதியில் உள்ள முத்தியால்பேட்டை பிடாரியார் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில், தற்பொழுது சோதனையானது நடைபெற்று வருகிறது. அதேபோல, தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்ய உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தின் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இது தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியிலும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT