ADVERTISEMENT

தூண்டில் வளைவு இருந்திருந்தால் 30ம் உடைந்திருக்காதே!

04:12 PM Dec 02, 2019 | santhoshb@nakk…

பல வருடக் கோரிக்கையான தூண்டில் வளைவு இல்லாததால், இன்று (01.12.2019) வீசிய சூறைக்காற்றுக் காரணமாக ஒன்றரைக்கோடி மதிப்பிலான 30- க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்து கரை ஒதுங்கின.

ADVERTISEMENT


வடகிழக்குப் பருவமழையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதில் பல இடங்களில் வெள்ள நீர் உட்புகுந்து குடியிருப்புகளை ஆக்கிரமித்து அச்சம் ஏற்படுத்தி வரும் வேளையில், மழைக்காக துறைமுகத்தில் கட்டப்பட்டிருந்த படகுகளும் தப்பவில்லை. இன்று மண்டபம் பகுதிக்குட்பட்ட தென்கடல் பகுதியில் வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 25 படகுகள் சேதமடைந்தது நீருக்குள் அமிழ்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், 7 படகுகள் மட்டும் கரையை அடைந்தது. கரை ஒதுங்கிய படகுகளையும், கடலில் அடித்து செல்லப்பட்ட படகுகளையும் தேடி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மீனவர்கள்.

ADVERTISEMENT


"கடல் அரிப்பு என்பது இங்கு சர்வசாதாரணமாகிவிட்டது. இப்பகுதியில் தூண்டில் வளைவு வேண்டுமென பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அரசும் செவி மடுக்கவில்லை. இங்கு தூண்டில் வளைவு இருந்திருந்தால் இப்பிரச்சனை ஏற்பட்டிருக்காதே.." என்கின்றனர் அப்பகுதி மீனவர்கள். சேதமடைந்தது சுமார் 30 படகுகள் எனவும், அதனின் மதிப்பு ஒன்றரைக் கோடி இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT