ADVERTISEMENT

ராமலிங்கம் கொலை வழக்கு... முகமது ஃபரூக் வீட்டில் என்ஐஏ சோதனை

07:07 PM May 09, 2019 | kalaimohan

திருபுவனத்தில் மத மாற்றத்திற்கு எதிராக பேசிய பாமகவை சேர்ந்த ராமலிங்கம், கொலை செய்யப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது ஃபரூக் என்பவரது வீட்டில் என்.ஐஏ சோதனையில் ஈடுபட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிலர் மதபிரசங்கம் செய்துகொண்டிருந்தனர், அப்போது அந்த வழியாக சென்ற ராமலிங்கம் என்பவர், மத பிரசங்கம் செய்தவர்களுக்கு எதிராக நடந்துகொண்டார், அங்கிருந்த இஸ்லாமியரின் குள்ளாவை வாங்கி தன் தலையில் போட்டுக்கொண்டு, அவர்கள் நெற்றியில் விபூதியை பூசி ஆக்ரோஷமாக பேசினார், இந்த சம்பவம் சமூக வளைதலங்களில் வைரலாகி பரபரப்பானது.

இந்த நிலமையில் அன்று பனிகளை முடித்துவிட்டு தனது மூத்தமகனோடு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார் ராமலிங்கம். அப்போது இடைமறித்த சிலர் ராமலிங்கத்தின் இரண்டு கைகளும் வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். இந்தகொலை வழக்கில் 11 இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தை கண்டித்து பா,ஜ,க, இந்துமக்கள் கட்சி, ஆர்,எஸ்,எஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்கள் நடத்தினார்கள், அதனால் ராமலிங்கத்தின் கொலை தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே போராடங்கள் செய்ததால் இந்த வழக்கு என்.ஐ.ஏ.விற்கு மாற்றப்பட்டு ராமலிங்கத்தின் மகன் மற்றும் மனைவியிடம் விசாரணை நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து கடந்த 2 ஆம் தேதி காலை 8 மணியளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஐந்துபேர். துப்பாக்கி ஏந்திய போலீஸார் ஐந்துபேர் மற்றும் ஒரு வேனில் போலீஸ் என அதிரடியாக திருச்சி பாலகரையில் உள்ள திருச்சி பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு வந்தனர். 3 வது மாடியில் அமைந்துள்ள அக்கட்சி அலுவலகத்தை திறந்து மணி கணக்கில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முகமது ஃபரூக் வீட்டில் என்ஐஏ சோதனையை தொடங்கியுள்ளது. திருச்சி மணப்பாறையை அடுத்த இளங்காகுறிச்சியில் உள்ள முகமது பரூக் வீட்டில் சோதனை நடைபெற்றுவருகிறது. இந்த கொலை வழக்கில் நேற்றுதான் முகமது ஃபரூக் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT