தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் வினாயகம்பேட்டையைச் சேர்ந்த இராமலிங்கம் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர் கடந்த 5ம் தேதி தமது கடையில் வணிகத்தை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது திருபுவனம் புது முஸ்லீம் தெருவில் ஒரு கும்பலால் வழிமறித்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளிகளை கண்டு பிடிக்க தஞ்சை எஸ்பி மகேஷ்வரன், அரியலூர் எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

Advertisment

RAMALINGAM

இந்த வழக்கில் முதல்கட்டமாக திருபுவனத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். போலிசார் தொடர் விசாரணையில் கொலையாளிகள் பயன்படுத்திய கார் திருச்சியில் தனியே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு அடுத்த கட்ட விசாரணைக்கு நகர்ந்துள்ளனர்.

Advertisment

CAR

திருச்சியில் கைப்பற்றப்பட்ட கார் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ஒருவர் தஞ்சை கோவிலடியை சேர்ந்த அலாவூதின் என்பவருக்கு விற்றிருப்பதும், அலாவூதியின் திருச்சியில் உள்ள முகமதுஇப்ராஹீம் என்பவருக்கு விற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் இதுவரை காரின் உரிமம் மாற்றப்பட்டவில்லை.

இது கொலையாளிகள் பயன்படுத்திய கார் என்று போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளதால் இராமலிங்க கொலை வழக்கு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

Advertisment