ADVERTISEMENT

சமூக நீதியைப் பாதுகாக்கும் இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து! -டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை      

04:01 PM Aug 06, 2018 | rajavel


மகாராஸ்ட்ரா மாநிலத்திலுள்ள மராத்தா சமூகத்தினர் தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீண்ட வருடங்களாகப் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், இந்த போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, ‘’ அரசு துறைகளில் வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டதால், இட ஒதுக்கீடு வழங்கினாலும் வேலைக் கிடைக்க வாய்ப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது. புதிய நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இட ஒதுக்கீடு வழங்கினாலும் அரசு வேலை கிடைப்பது சாத்தியமில்லையே! ‘’ என தெரிவித்திருக்கிறார்.

ADVERTISEMENT

நிதின்கட்கரியின் இந்த கருத்து இட ஒதுக்கீட்டினை முற்றிலும் ஒழித்துக்கட்ட அரசு தயாராகியிருப்பதையே காட்டுகிறது. மத்திய-மாநில அரசு துறைகளில் காலிப் பணியிடங்கள் குறித்து காங்கிரஸ், சமாஜ்வாதி, தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு, ‘’ நாடு முழுவதும் 24 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இதனை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ‘’ என மத்திய பாஜக அரசு பதிலளித்திருக்கிறது.

இருப்பினும், பாஜக அரசு பொய் சொல்வதாகவும் இட ஒதுக்கீடு கொள்கையை மெல்ல மெல்ல அழித்தொழிக்கும் முயற்சியாகவே காலி பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதாகவும் சமூக நீதிக்காக போராடும் அரசியல் தலைவர்கள் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து அறிக்கை வாசித்துள்ள டாக்டர் ராமதாஸ், ‘’ அரசு துறைகளிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பினாலே இடஒதுக்கீடு பிரிவினருக்கு சமுக நீதி வழங்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் இட ஒதுக்கீட்டினால் பலனில்லை என்பது போல நிதின் கட்கரி பேசுவது முறையல்ல! அரசு துறைகளில் வேலை வாய்ப்புகள் குறைந்திருப்பதன் மூலம் சமூக நீதிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்வதை தவிர்த்துவிட்டு, வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் இட ஒதுக்கீடு தேவையில்லை என்கிற முடிவுக்கு வருவது ஆபத்தானதாகும்! ‘’ என கண்டித்திருக்கிறார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT