ADVERTISEMENT

அதிமுகவில் இணைகிறாரா ரஜினிகாந்த்? அமைச்சர் பரபரப்பு பேட்டி

01:56 PM Aug 05, 2018 | Anonymous (not verified)


ADVERTISEMENT

ADVERTISEMENT

ரஜினிகாந்த் அதிமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,

ரஜினிகாந்த் எந்த மாதிரியான நிலைப்பாடு எடுக்க போகிறார் என்பது தெரியவில்லை. எப்போது கட்சி ஆரம்பிக்க போகிறார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. எந்த அளவுக்கு ஒரு வளர்ந்த கட்சியில் குளறுபடி இருக்குமோ, அந்த குளறுபடிகளை அவரது அமைப்பில் இப்போதே பார்க்க முடிகிறது. ரஜினியின் கொள்கை என்னவென்பது இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை.

ரஜினிகாந்த் ஒருபக்கம் திமுக தலைமையையும் புகழ்ந்து பேசுகிறார். எம்.ஜி.ஆர் ஆட்சியை தருவோம் என்றும் கூறுகிறார் அதனால் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. யார் கண்டார் அவர் எங்க கூடவே வந்து சேரலாம். அதிமுகவுடன் கூட்டணியாக இருக்கலாம் அல்லது அவர் அதிமுகவில் கூட இணையலாம் என அவர் கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT