ADVERTISEMENT

ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த ரஜினி

10:21 AM Nov 12, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தமிழகத்தின் பல இடங்களில் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். மேலும் மக்கள் காலையிலேயே வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர், ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் எனப் பலரும் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி தனது ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்து வருகிறார் ரஜினி.

இந்த நிலையில், இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாலை முதல் ரசிகர்கள் குவிந்திருந்தனர். இதையடுத்து ரஜினிகாந்த் தனது இல்லத்தின் வாசலில் நின்றவாறு ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். ரஜினியைப் பார்த்தவுடனேயே உற்சாகமடைந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT