கடந்த சில தினங்களுக்கு முன்பு நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்புத்தளத்தில் இருந்து நடிகர் விஜயை சென்னை அழைத்துவந்த வருமான வரித்துறையினர், விஜயின் பனையூரில் உள்ள வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விஜயின் வீட்டில் 23 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையும் நடத்தினர். இதற்கிடையில் என்எல்சி நிர்வாகம் மாஸ்டர் படத்திற்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது தவறு என பாஜகவினர் சூட்டிங் நடைபெறும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

AIADMK MLA Karunas press meet

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

விஜய்க்கு இப்படி தொடர்ச்சியாக பல நெருக்கடிகள் வந்தது. அவருக்கு ஆதரவாக இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, அமீர் போன்ற பல சினிமா பிரபலங்களும், வேல்முருகன், சீமான் போன்ற அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில் நெய்வேலியில் ஆரவாரங்களுக்கு நடுவே ரசிகர்கள் மத்தியில் வேன் மீது ஏறி செல்பி எடுத்து அதை விஜய், தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு தமிழகத்தின் தற்போதைய சென்ஷேசன் ஆனார்.

இந்நிலையில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் அவரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடிகர் ரஜினி பா.ஜ.க விற்கு ஆதரவான கருத்துகளை பேசி வருவதால் கூட வருமான வரித்துறை அவருக்கு விலக்கு அளித்திருக்கலாம் என்றும் படப்பிடிப்பு நடப்பதே தெரியாமல் இருந்த இடத்தில் விசாரணை என்ற பெயரில் வருமான வரித்துறை சென்றதால் தற்போது ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடி நடிகர் விஜயின் பலத்தை மத்திய மாநில அரசுகளுக்கு காட்டியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.