ADVERTISEMENT

ராஜேந்திர பாலாஜி - அர்ஜுன் சம்பத் சந்திப்பு-பின்னணி என்ன?

11:01 PM Jul 26, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் சந்தித்துப் பேசினார்.

75-வது ஆண்டு சுதந்திர தினவிழா அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதனைக் கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை, அனைத்து வீதிகளிலும் தேசியக்கொடியைப் பறக்கவிட வேண்டும் எனப் பிரதமர் மோடி வலியுறுத்தியிருக்கிறார். இதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில், மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கவுரவிக்கும் வகையில், சிலைகள், மணிமண்டபங்கள் மற்றும் வீடுகளுக்குச் சென்று, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து வருகிறார். இந்நிலையில், சிவகாசி - திருத்தங்கல்லில் அதிமுக அமைப்புச் செயலாளர் ராஜேந்திர பாலாஜியை, அவரது இல்லத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சந்தித்துப் பேசி, தேசியக் கொடியை வழங்கினார்.

ராஜேந்திர பாலாஜி, இந்து மதத்தின் மீது அதீத பற்றுள்ளவர் என்பதும், 'டாடி' என சொல்லுமளவிற்கு பிரதமர் மோடி மீது பாசம் உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT