edapadi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை நேரில் சந்திக்க கடந்த 30-தேதி பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், நாளை அவரை சந்திக்க ஒப்புதல் கிடைத்துள்ளது என்ற செய்தியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அதேபோல் அண்மையில் நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பிரதமரை நேரில் சந்தித்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது தொடர்பாக நேரில் வலியுறுத்த இருப்பதாகதெரிவித்திருந்தார். இந்நிலையில் சந்திப்புக்கு நேரம் நாளை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால். இன்று மாலை எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல இருக்கிறார். தமிழகத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து பிரதமரிடம்அவர் நேரில் வலியுறுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்த டெல்லி பயணத்தில் முதல்வர் எடப்பாடியுடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் செல்ல இருக்கின்றனர்.