ADVERTISEMENT

'இந்த விபத்திற்கு மழைநீர் வடிகால் பணி காரணமல்ல'-மேயர் பிரியா விளக்கம்

10:41 AM Jun 25, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மரம் சாய்ந்து விழுந்ததில் காரில் சென்ற வங்கியின் மேலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூரைச் சேர்ந்த வாணி என்பவர் கேகே நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் மேனேஜராகப் பணியாற்றி வந்தார். இவர் பணி முடித்துவிட்டு, தனது காரில் தங்கை எழிலரசியுடன் புறப்பட்டார். வங்கியில் இருந்து 100 மீட்டர் தொலைவு சென்ற போது, சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று, கார் மீது விழுந்தது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியதால் வாணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஓட்டுநர் கார்த்திக்கும், தங்கை எழிலரசியும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ததுடன், நொறுங்கிய காரில் இருந்த வாணியின் உடலை மீட்டு, சென்னை ஓமந்தூரார் அரசு தலைமைப் பொது மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்த விபத்திற்கு மழைநீர் வடிகால் பணி காரணமல்ல என சென்னை மேயர் ப்ரியா விளக்கமளித்துள்ளார். மேலும் முறிந்து விழும் பழமையான மரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT