Skip to main content

புயல் நிவாரணத்தைகூட கடனில் கழிக்க துடிக்கும் வங்கிகள்; விவசாயிகள் வேதனை!!

Published on 20/12/2018 | Edited on 20/12/2018

கஜாபுயல் பாதித்த பகுதிகளில் அரசாங்கத்தால் வழங்கிவரும் நிவாரண  பணத்தை எடுக்க முடியாதபடி விவசாயிகளின் வங்கி கணக்குகள் வங்கிகள் முடக்கிவருகின்றன, விவசாயிகள் விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை கட்டச்சொல்லி வங்கிகள் கெடுபிடி செய்வதாக விவசாயிகளும், பொதுமக்களும் கலக்கம் அடைந்துள்ளனர்; அரசு வழங்கிய 10 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை எடுக்க முடியாததால், வீடுகளை சீர் செய்ய முடியாமல் நடுத்தெருவில் நிற்கும் பொதுமக்கள்.

 

 The banks lock their  our accounts; Farmers suffer

 

கஜாபுயலால் பெரும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வேதாரணயம், கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி ஆகிய தாலுக்காவும் முதலிடம் வகிக்கிறது, புயலால் பாதித்த பகுதிகளில் வீடுகளை சீர் செய்வதற்காக தமிழகஅரசு சார்பாக ஒரு குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் அவரவர்களின் வங்கி கணக்கில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு வரவுவைக்கபட்டுவருகிறது. 

 

 

இந்தநிலையில் நாகை மாவட்டத்தின் கடலோரகிராமங்களான புதுப்பள்ளி, விழுந்தமாவடி, உள்ளிட்ட பகுதிகளில் விவசாயக்கடன், கல்விக்கடன், சுயஉதவிகுழுக்கடன் உள்ளிட்ட கடன்களை வாங்கியவர்களின் வங்கிகணக்குகளை பணம் எடுக்கமுடியாதபடி முடக்கப்பட்டுள்ளது.  இதை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அரசு வழங்கிய சொற்ப நிவாரணமான 10 ஆயிரம் ரூபாயைக்கூட எடுக்க முடியாமல் புதுப்பள்ளி, விழுந்தமாவடி உள்ளிட்ட கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

 

 The banks lock their  our accounts; Farmers suffer

 

"கஜாபுயலின் கோரதாண்டவத்தினால், குந்தி எழுந்த வீடுகள், உடைமைகள், வாழ்வாதாரமாக இருந்துவந்த மரங்கள், கால்நடைகள் உள்ளிட்ட  அனைத்தையும் இழந்து வீதிகளில் விதியை நினைத்து பொங்கி கால்வயிறு பசியாறும் அப்பாவி மக்களிடம் அவர்கள் வாங்கிய சொற்ப கடனுக்காக நிவாரணத்தில் ஈடுகட்ட நினைப்பது கண்டிக்கதக்கது. " என்கிறார் கம்யூனிஸ்ட் தோழர் ஒருவர்.

 

 The banks lock their  our accounts; Farmers suffer

 

பாதிக்கப்பட்ட மக்களோ " 10ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்துதான் வீடுகளை சரிசெய்ய திட்டமிட்டு இருந்தோம், ஆனால் அந்த பணமும் தற்போது கிடைக்காமல் போகும் நிலையாகிடுச்சி.  வீடுகள் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறோம், நிவாரணமாக கிடைத்த குறைந்த பணத்தை எடுப்பதற்கு வங்கிக்கு போனால்,கல்வி கடன், விவசாய கடனை திரும்ப செலுத்தினால் மட்டுமே இந்த பணத்தை எடுக்க முடியும் என விழுந்தமாவடி ஐஓபி வங்கி கிளை மேலாளர் ஒருமையில் திட்டி விரட்டுகிறார்." என்கிறார்கள்.

 

 

விவசாயி ஒருவர் கூறுகையில், " தமிழக அரசு உடனடியாக நிவாரண பணம் கிடைக்க வழிவகை செய்யவேண்டும், பல நாட்கள் போராடி கிடைத்த சொற்ப நிவாரண தொகையையும் வங்கி கணக்கில் வந்தபிறகும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுவதுபோல் வங்கி அதிகாரிகள் செய்வது வேதனையாக இருக்கிறது. அதில் அரசு தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்திட செய்யவேண்டும், " என்கிறார்.

 

 

பல்லாயிரக்கணக்கான கோடிகளை கடனாக வாங்கி ஏமாற்றிவிட்டு அரசியல்வாதிகளின் துணையோடு பவனிவரும் இந்த நாட்டில்தான், பலரின் வயிற்றுப் பசியைப் போக்கி வரும் விவசாயிகள் வாங்கிய சொற்ப கடனை அவர்கள் கட்டவில்லை என அவமானப்படுத்துவதும், வரலாறு காணாத  புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்த குறைந்த நிவாரணத்தையும் கடனுக்காக பிடுங்க நினைப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்