ADVERTISEMENT

தனியாருக்கு தாரை வார்க்கும் திருச்சி ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தயார் ஆகும் போராட்டம் 

03:06 PM Sep 28, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT


திருச்சியில் ரயில்வே நிலையம் என்பது தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்து இருப்பதால் போக்குவரத்துக்கு உகந்த இடமாக இருப்பதால் இங்கே வந்து செல்லும் பயணிகள் அதிக அளவில் வந்து செல்வார்கள். திருச்சியில் ரயில்வேக்கு சொந்தமான இடங்கள் ஏகப்பட்ட இடங்கள் இருக்கின்றன. பொன்மலை டீசல் செஷ்டு இருப்பதால் இதற்கு சொந்தமாக இடம் நிறைய இருக்கிறன். இவர்கள் எல்லாம் இரயில்வேயின் கட்டுபாட்டிலே இருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருச்சியில் ரயில்வேக்கு சொந்தமாக நிறைய இடங்கள் சுத்தப்படுத்தும் வேலைகள் துரிதமா செய்ய ஆரம்பித்தனர். சுத்தப்படுத்தி பயன்பாட்டிற்கு இரயில்வே நிர்வாகம் கொண்டு வரும் என்று நினைத்த நேரத்தில் அவை அனைத்தையும் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் டெண்டர் கொடுத்திப்பது பொதுமக்கள் இடையே பெரிய அதிர்ப்தியை ஏற்படுத்தி வருகிறது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மிகப்பெரிய மைதானம், குட்செட் ரயில்வே இடையே இருந்த பெரிய காலி இடம், பொன்மலை சந்தை, ஜி.கார்னர் அருகே உள்ள மரங்களை எல்லாம் வெட்டி சாய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ரெயில்வேவை மத்திய அரசு தனியார்மயமாக்கி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ரெயில்வே ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் விளக்க கூட்டம் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் நடந்தது. இதில் தொழிற்சங்கத்தின் மண்டல தலைவர் ராஜா ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசும் போது..

ரெயில் நிலையங்களை மேம்படுத்துதல் என்ற பெயரில் தனியார் மய கொள்கையை மத்திய அரசு கடைபிடிக்கிறது. ரெயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்பந்தம் விட்டு ரெயில்வே ஊழியர்கள் இல்லாத நிலையை உருவாக்க பார்க்கிறது. தற்போது ரெயில்வே மின்பாதைகளை தனியாருக்கு விற்க முயற்சிக்கிறது.

ரெயில்வேயை கண்மூடித்தனமாக தனியாருக்கு விற்க முயற்சிப்பதை எதிர்த்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும், ரெயில்வேயை காப்பாற்றவும் மத்திய அரசுக்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதர தொழிற்சங்கங்களையும் கலந்து பேசி எந்த வகையான போராட்டம் என்பதும், எந்த தேதி என்பதும் அறிவிக்கப்படும். என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT