ADVERTISEMENT

ராகுல்தான் ''பிரதமர்''- திக மாநாட்டில் ஸ்டாலின்

03:18 PM Feb 25, 2019 | selvakumar

’’நான் அப்பவும் சொன்னேன், இப்பவும் சொல்கிறேன், எப்பவும் சொல்வேன், ராகுல் காந்தி தான் எங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்" என திராவிடர் கழக மாநாட்டில் மீண்டும் அதிரடியை கிளப்பினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தஞ்சையில் திராவிடர் கழகத்தின் மாநில மாநாட்டை, 23,24 ஆகிய தேதிகளில் மிகபிரமாண்டமாக நடத்தி அசத்தினர் திராவிடர் கழகத்தினர். கருஞ்சட்டை பேரணி, சிலம்பாட்டம், பறையாட்டம், கருத்தியல் அரங்கம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. அந்த மாநாட்டின் இரண்டாவது நாளில் சிறப்புறையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின் இப்பவும் சொல்கிறேன் ராகுல் தான் பிரதம வேட்பாளர் என்று பேசினார்.

டிசம்பர் மாதம் 16ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் சிலை திறப்பு விழாவின் போது பேசிய ஸ்டாலின் "எங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்". என அறிவித்தார். இது தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக திரண்ட கட்சித்தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.பல அரசியல் தலைவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் முனங்கினர். ஸ்டாலின் தவிர மற்ற தலைவர்கள் அனைவரும் தேர்தல் முடிந்த பிறகு பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துகொள்ளலாம் என்றே தெரிவித்தனர்.

பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் இதை கிண்டலும் செய்யதனர், தமிழகத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் கிண்டல் அடித்தனர், திமுகவினரே ஸ்டாலின் அவசரப்பட்டு சொல்லிவிட்டாரோ என்கின்ற முனுமுனுத்தனர். அதை உணர்ந்த ஸ்டாலின் அது தொடர்பாக மீண்டும் பேசாமலே இருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் திக மாநாட்டிற்கு வந்து பேசிய ஸ்டாலின்,’’ இன்று மத்தியில் ஆளும் மோடி அரசு இரவோடு இரவாக 1000, 500 நோட்டு செல்லாது என்று அறிவித்து எங்களிடம் இருந்து பெற்ற 1500 ரூபாய் பணத்தில் 6,000 ரூபாயை திருப்பிக் கொடுக்கிறது மத்திய அரசு. இது திருட்டுத்தனம் என்பதை காட்டுகிறது. இனி நரேந்திர மோடி ஆட்சிக்கு வரமுடியாது. மோடியால் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. அவர் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பே இல்லை, அதற்கான சூழலும் இல்லை, விரைவில் நாடாளுமன்றத்தில் நடக்க இருக்கின்ற தேர்தல் மூலமாக மத்தியில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது.

அங்கு ஆட்சி மாற்றத்தில் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக்கழகமும் காரணமாக இருந்திருக்கிறது. ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் அந்த நிலை உருவாகி இருக்கிறது. ராகுல் காந்திதான் பிரதம வேட்பாளர் என திராவிடர் கழக மாநாட்டில் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக்கியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT